என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீசில் தஞ்சம்"
- திருமணத்துக்கு எதிர்ப்ப தெரிவித்தால் வீட்டை விட்டு வெளியேறினார்
- காதல் ஜோடி பெற்றோருடன் போலீசார் பேச்சுவார்த்தை
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பங்களா மேட்டை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் வெற்றிவேல் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு வெற்றிவேலுக்கு அதே சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த இந்துமதி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து அவர்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இந்துமதியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க அவரசமாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதனையடுத்து இந்துமதி நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றார்.
2 பேரும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்தனர். பின்னர் காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- திட்டக்குடி அருகே போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
- இருவீட்டு பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுநத்தம் கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது27). அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் கவுசல்யா (23) இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போது 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனால் கவுசல்யா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதிர்ச்சி அடைந்த கவுசல்யா தன்னை திருமணம் செய்துகொள்ள முருகானந்தத்தை வற்புறுத்தி உள்ளார். ஆனால் காதலர்கள் 2 பேரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த நிலையில் முருகானந்தம் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் கவுசல்யா தரப்பினர் புகார் அளித்தனர். இதுகுறித்து திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப் இன்ஸ்பெக்டர் தனசீலன் ஆகியோர் இருவீட்டு பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தினர். பின்னர் போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு ஆவினங்குடி போலீஸ் நிலைத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அதன்பின்னர் கவுசல்யாவின் பெற்றோர், உறவினர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
- பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்
- வடவள்ளி போலீசில் தஞ்சம் அடைந்தனர்
வடவள்ளி,
கோவை உப்பிலி பாளையம் ஜி.வி. ரெசிடென்சி வீதியை சேர்ந்தவர் மணிராஜ் (22). பேரூர் பகுதியில் லோடு ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
பேரூர் அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்த வர் சுபாஷினி (19). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். மணிராஜூக்கும், சுபாஷினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சுபாஷினி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் சுபாஷினியை மணிராஜ் கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்து இருந்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த மணிராஜூம், சுபாஷினியும் நேற்று மாலை வடவள்ளி போலீஸ்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் 2பேரும் வெள்ளலூரில் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்தை பதிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.
சுபாஷினியின் பெற்றோர் தங்களுடன் வரும்படி கூறி கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால் சுபாஷினி காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். காதல் ஜோடியினர் 2 பேரும் மேஜர் என்பதால் சுபாஷினியை அவரது காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
பாசமாக வளர்த்த மகள் தங்கள் வார்த்தையையும் மீறி காதலனுடன் செல்வதை பார்த்து பெற்றோர் கண்கலங்கிய படி போலீஸ்நிலைய வாசலில் நின்றனர். பெண்ணின் பெற்றோர் நடத்திய பாசப்போராட்டம் அங்கு ேதாற்றுப் போனது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெ.குரு. வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மகள் விருத்தாம்பிகை(வயது 20). இவரும், காடுவெட்டி குருவின் தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜ்கிரண்(27) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.
இவர்களது திருமணம் நேற்று கும்பகோணத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விருத்தாம்பிகையும், மனோஜ்கிரணும் மணக்கோலத்தில் உறவினர்கள் சிலருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
கும்பகோணத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், தனது திருமணத்திற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் அவரிடம் அதுபற்றி கூறவில்லை எனவும் கூறினார். காடுவெட்டியில் உள்ள தனது உறவினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். #KaduvettiGuru #Daughter #Marriage
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெ.குரு. வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மகள் விருத்தாம்பிகை(வயது 20). இவரும், காடுவெட்டி குருவின் தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜ்கிரண்(27) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.
இவர்களது திருமணம் நேற்று கும்பகோணத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விருத்தாம்பிகையும், மனோஜ்கிரணும் மணக்கோலத்தில் உறவினர்கள் சிலருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
பின்னர் மனோஜ்கிரண் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான்(மனோஜ்கிரண்), காடுவெட்டி குருவின் தங்கை மகன். நானும் விருத்தாம்பிகையும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு காடுவெட்டி பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #KaduvettiGuru #Daughter #Marriage
வடமதுரை:
திருச்சி மாவட்டம் வையம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முக வள்ளி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி, வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இதே மில்லில் வேலை பார்த்த தென்னம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதல் விபரம் சண்முகவள்ளி குடும்பத்துக்கு தெரியவரவே வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்தனர். பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்த நிலையில் சண்முகவள்ளி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனிடம் நடந்த விபரங்களை கூறினார்.
இதனையடுத்து இன்று வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு ரமேஷ் தனது காதல் மனைவியுடன் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் சாரங்கா (வயது 23). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் ஜீவராஜாத்தி (18) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர் தற்போது திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் காதல் விபரம் வீட்டுக்கு தெரிய வரவே 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பாளை அருகேயுள்ள சிவந்திபட்டியை சேர்ந்தவர் கோட்டையப்பன்(வயது23). இவர் கேரளாவில் பேக்கரி வைத்து நடத்திவருகிறார். நெல்லையை அடுத்த தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் சுஷ்மிதா(22). பட்டதாரியான இவர் தென்காசியில் ஒரு ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வருகிறார்.
சுஷ்மிதா இந்த ஆண்டுதான் கல்லூரி படிப்பை முடித்தார். பாளையில் ஒரு தனியார் கல்லூரியில் இவர் படித்தபோது அப்பகுதியில் உள்ள மற்றொரு கல்லூரியில் கோட்டையப்பன் படித்தார். இருவரும் வேறு வேறு பஸ்சில் வந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
பஸ் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்டபோது அவர்களுக்கிடையே காதல் உண்டானது. இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் தங்கள் காதலை வளர்த்துக்கொண்டனர். கல்லூரி படிப்பை முடித்து அவர்கள் வேலைக்கு சென்றபின்னரும் அவர்களது காதல் தொடர்ந்தது. இந்த காதல் விவகாரம் சுஷ்மிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.
சுஷ்மிதாவின் காதலுக்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுஷ்மிதாவுக்கு அவரது வீட்டினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் சுஷ்மிதாவுக்கு நிச்சயம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த சுஷ்மிதா தனது காதலரிடம் இதுபற்றி கூறினார்.
இதையடுத்து கடந்த 14-ந்தேதி சுஷ்மிதா வீட்டைவிட்டு வெளியேறி காதலன் வீட்டுக்கு சென்றார். இன்று காதல்ஜோடி அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனிடையே மகளை காணவில்லை என சுஷ்மிதாவின் தந்தை மாரியப்பன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி சுஷ்மிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் தேடுவதை அறிந்த காதல் ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கழுத்தில் மாலை அணிந்தபடி வந்தனர். தங்களை பிரிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி சுஷ்மிதா தனது காதலனுடன் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.
அலுவலகத்தில் இருந்த போலீஸ் உயர் அதிகாரிகளை காதல் ஜோடியை தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். தாழையூத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். #tamilnews
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே போத்தாநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது20). இவர் வடமதுரை அருகே உள்ள தனியார் மில்லில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி திடீரென மாயமானார். இதனால் அவரது உறவினர்கள் மில்பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். விஜயலட்சுமி மாயமானது குறித்து வழக்குபதிவு செய்து வடமதுரை போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் விஜயலட்சுமி அதேமில்லில் வேலை பார்த்த வடமதுரை கன்னிமார்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரமேசை சில ஆண்டுகளாக காதலித்து வந்தேன். எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி பழனிமுருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.
தற்போது போலீசார் தேடுவதை அறிந்து பாதுகாப்பு கேட்டு இங்கு வந்தோம் என்றார். போலீசார் இருவரும் மேஜர் என்பதால் இருவீட்டாரையும் அழைத்து சமரசபேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்